அன்னதானத்தை விமர்சிப்பதா?: அமைச்சர் கண்டனம்
சென்னை:
கோவில்களில் அன்னதானம் வழங்குவதை விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று தமிழக இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்துக் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகம்செய்திருப்பதை சில கட்சிகள் கண்டித்து விமர்சனம் செய்துள்ளன.
இது துரதிர்ஷ்டவசமானது. பத்திரிக்கைகள் சிலவும் கூட இதை விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.காமாலைக் கண்ணுடன் இதை அவர்கள் பார்த்துள்ளனர். அதனால் தான் எல்லாமே மஞ்சளாக அவர்களுக்குத்தெரிந்திருக்கிறது.
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் சென்னை கபாலீசுவரர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தஅன்னதான நிகழ்ச்சிக்கு வந்ததை அரசியலாக்குகிறார்கள்.
உண்மையில் தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் பாஜகவின் லட்சுமணனுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டது. மற்ற தலைவர்கள் அனைவரும் அவர்களாகவே விரும்பி வந்தார்கள்.
மதிய உணவு நிகழ்ச்சியின்போது ஏராளமானோர் உணவு கிடைக்காமல் வெளியில் காத்திருந்ததாக கூறுகிறார்கள்.தினசரி கல்யாண விருந்து போல 2,000 பேருக்கு உணவு படைக்க அரசு திட்டமிடவில்லை.
பசித்த வேளையில், கோவிலுக்கு வரும், ஜாதி, மத பேதமற்ற வகையில் உணவிடவே அரசு திட்டமிட்டுள்ளது.எனவே பல கோவில்களில் உணவு குறைபாடு காரணமாக பலருக்கு உணவு கிடைக்காமல் போயிருக்கலாம்.
அன்னதானத்தை அனைத்து மதங்களுமே ஆதரிக்கின்றன. எனவே இது ஒரு மத சார்பான நிகழ்ச்சி என்று கூறமுடியாது என்று ராமசாமி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications