நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் "பொடோ" தாக்கல்
டெல்லி:
வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொடோ சட்டமசோதாவை உள்துறை அமைச்சர் அத்வானி தாக்கல் செய்தார்.
கூட்டம் தொடங்கியதிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த மக்களவைத் துணை சபாநாயகரான பி.எம். சயீது பலமுறை கேட்டுக் கொண்டபிறகே உறுப்பினர்கள் அமைதியானார்கள். பின்னர் பொடோ மசோதாவைத் தாக்கல் செய்யுமாறு அத்வானியைஅவர் அழைத்தார்.
இதையடுத்து பொடோ மசோதாவை அத்வானி தாக்கல் செய்த பின்னர், இம்மசோதா மீதான விவாதம் தொடங்கி,தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணி வரை இடைவிடாமல் இந்த விவாதம் நடைபெறும்.
அதன் பின்னர் பொடோ சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும். மக்களவையில் வெற்றி பெற்று,ராஜ்யசபாவில் இம்மசோதா தோல்வியடைந்ததால், இந்த இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் இது நிச்சயம்நிறைவேறும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய நிலைக்கு மத்தியஅரசு தள்ளப்பட்டது. கடந்த 1961ல் வரதட்சணைத் தடுப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றவும், 1978ல் வங்கிக்கமிஷன் சட்ட மசோதாவை நிறைவேற்றவும் இரு சபைகளும் ஒன்றாகக் கூடின.
அவற்றுக்குப் பிறகு தற்போதுதான் மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications