ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 2,000 பேர் பலி
காபூல்:
வடக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது2,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
போரினால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் தற்போதுதான் சிறிது சிறிதாக தேறிக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் நேற்றிரவு சுமார் 7.30 மணிக்கு கடுமையான நிலநடுக்கம்ஏற்பட்டது.
இதையடுத்து பக்லான் பகுதியில் உள்ள நஹ்ரின் என்ற நகரத்தில் சுமார் 4,000 வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள், தூக்கத்திலேயே இடிபாடுகளுக்குள்சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 2,000 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
மேலும் சுமார் 10,000 பேர் வீடுகளை இழந்து விட்டனர். ரிச்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கத்தின் அளவு5.8ஆகப் பதிவாகியிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.0ஆகப்பதிவானதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை 2.30 மணியிலிருந்து 4.00 மணி வரை மீண்டும் நிலம் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 1998ல் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இரு வேறு நிலநடுக்கங்களில் 9,000க்கும் மேற்பட்டவர்கள்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications