ஆயுதப்படை காவலருக்கு பெண் போலீஸ் அதிகாரி விட்ட "பளார்" அறை
மதுரை:
மதுரையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவரை பெண் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்து தாக்கியதால்,அவருடைய காது செவிடாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் அல்-உம்மா கைதிகளான இமாம் அலி மற்றும் ஹைதர் அலிஆகியோர் தப்பிச் செல்வதற்கு உதவிய சில தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகளைத் தொடர்ந்து காவல் காப்பதற்காக ஆயுதப்படை போலீசார் நாள் முழுவதும்நிறுத்தப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் இவர்கள் காவல் காத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் பெயர்வன்னியன்.
சமீபத்தில் அவ்வாறு காவல் காத்துக் கொண்டிருந்த வன்னியன், அடுத்த ஷிப்ட் ஆயுதப்படை போலீஸ் வந்தவுடன்,வீட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
அந்த போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள ரெஜினா, தன்னிடம் அனுமதி பெறாமல்வன்னியன் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, அவருடைய கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டார்.
தன் கன்னத்தில் ரெஜினா திடீரென்று அறைந்ததால் அதிர்ந்து போன வன்னியனுக்கு மற்றொரு அதிர்ச்சியும்காத்திருந்தது. கன்னத்தில் அறை விழுந்ததால் அவருடைய காதிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
இதையடுத்து வன்னியன் உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குஅளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அறிக்கை வந்தால்தான் அவருடைய காது பாதிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவரும்.
இது தொடர்பாக மேலிடத்தில் கூறி ரெஜினா மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரப் போவதாக வன்னியன்கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications