தலித் பஞ்சாயத்து தேர்தல்: 6 பேர் வேட்புமனு தாக்கல்
மதுரை:
மதுரையில் உள்ள தலித் பஞ்சாயத்துக்களில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்குக் கடைசிநாளான இன்று (புதன்கிழமை) 6 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
மதுரையில் தலித் பஞ்சாயத்துத் தொகுதிகளான பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களும் ஆகியதொகுதிகளில் பல வருடங்களாக தேர்தலே நடைபெறவில்லை.
இந்த தொகுதிகள் தலித்துக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், இங்கு தலித்துக்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யவருபவர்களை உயர் ஜாதியினர் மிரட்டி வந்தனர். இதனால் இங்கு பல வருடங்களாக தேர்தலே நடக்கவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி இந்த தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.ஆனால் உயர் ஜாதியினரின் மிரட்டல் காரணமாக இம்முறையும் நேற்று வரை இங்கு யாரும் மனுத் தாக்கல்செய்யவில்லை.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று 6 பேர் தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர்.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பூங்கொடியான், கருத்தக்கண்ணன், பாலுசாமி ஆகிய மூன்று தலித்துகள்வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இதே போல் பாப்பாப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுப்பன், பனிக்கொடி, பாண்டியம்மாள் ஆகிய மூன்றுபேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் இந்த இரு தொகுதிகளிலும் வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக கடைசி நாளான இன்று வரை யாருமே மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதற்கிடையே நாட்டார்மங்கலம் தொகுதியில் கடைசி வரை யாருமே மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்ததொகுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications