மதுரை அருகே கிருஷ்ணசாமி கார் மீது கல்வீச்சு
மதுரை:
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கிருஷ்ணசாமி வந்த கார் மீது மர்ம கும்பலை சேர்ந்த சிலர் கல்லெறிந்துதாக்குதல் நடத்தினர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் பஞ்சாயத்துத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கள் தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த கிராமங்களில் பெரும்பான்மையாக வாழும் தேவர்சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டோர் யாரும்வேட்பு மனுத்தாக்கல் செய்தால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி இங்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போலதாழ்த்தப்பட்டோர் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முன் வரவில்லை.
இதையடுத்து புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தலித் கட்சிகள் தாழ்த்தப்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழ்நலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நாட்டார்மங்கலம் கிராமத்திற்குச்சென்றார். ஆனால் கிராம எல்லையிலேயே அவரை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தடுத்து நிறுத்தினர்.
தேவர் சமுதாயத்தினருக்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சகோதரர்கள்போலவே பழகி வருவதாகவும், நீங்கள் உள்ளே வந்தால் அது குலைந்து போய் விடும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
மேலும், முடிந்தால் அரசிடம் சொல்லி, இந்த கிராமத்தை பொதுப் பிரிவாக மாற்றுமாறு அவர்கள்கிருஷ்ணசாமியிடம் கேட்டுக் கொண்டனர். இதனால் கிருஷ்ணசாமி நாட்டார்மங்கலத்தை விட்டு திரும்பி வந்தார்.
திரும்பி வரும் வழியில் கருமாத்தூர் அருகே கிருஷ்ணசாமியின் கார் மீது சில மர்ம நபர்கள் கல்லெறிந்தனர்.இதனால் அவரது கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஆனால் அவருக்கு எதுவும் அடிபடவில்லை.
தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்து சேருவதற்கு முன், அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.


Click it and Unblock the Notifications
