மதுரை அருகே ஜல்லிக்கட்டு: 100 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சோழவந்தான் அருகே உள்ளது விக்கிரமங்கலம். இந்த கிராமத்திற்கு அருகே உள்ள கீழப்பட்டி என்ற இடத்தில்செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அதை அடக்க சுற்றுப்பட்டிகளைச் சேர்ந்த ஏராளமானஆண்களும் கலந்து கொண்டனர்.
காளைகள் கூட்டத்திற்குள் சீறிப் பாய்ந்ததில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்குபடுகாயம் ஏற்பட்டது.
அனைவரும் மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications