ஒரு வழியாக நிறைவேறியது "பொடோ"

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் கூச்சல் குழப்பங்களுக்கும் இடையே, நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான "பொடோ" நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நிறைவேறியது.

பொடோ சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 425 வாக்குகளும், எதிராக 296 வாக்குகளும் கிடைத்தன. இந்த "பொடோ"மீதான விவாதம் மட்டும் சுமார் 9 மணி நேரம் நடந்தது.

முன்னதாக "பொடோ"வைத் தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, செப்டம்பர் 11 அமெரிக்கதாக்குதல் மற்றும் டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.

தீவிரவாதத்துக்காக நம் நாட்டில் சுமார் 61,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டியஅத்வானி, இதனால்தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுக் கூட்டத்தையே கூட்ட வேண்டிய சூழ்நிலைஏற்பட்டது என்பதையும் கூறினார்.

"பொடோ"வை அமல் செய்தால் நாட்டில் பாதுகாப்பில்லாத நிலை உருவாகிவிடும் என்றும் அரசியல் எதிரிகள்மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள் ஆகியோரை இது பாதிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திகடுமையாகப் பேசினார்.

பிரதமர் மக்கள் நலனைக் காக்க வேண்டுமா அல்லது மற்றவர்களின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிய வேண்டுமாஎன்பது போன்ற வாஜ்பாயை உசுப்பி விடும் பல கேள்விக் கணைகளையும் சோனியா முன் வைத்தார்.

வாஜ்பாயின் முகமூடி கிழிந்து விட்டது என்றும் அவருடைய விஸ்வரூபம் தெரிந்து விட்டது என்றும் அவருக்குபரீட்சை நாள் வந்துவிட்டது என்றும்கூட சோனியா தன்னுடைய விவாதத்தின்போது பேசினார்.

சோனியாவைத் தொடர்ந்து விவாதத்தில் பேசிய மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும், "பொடோ"வைக் கடுமையாகஆட்சேபித்துப் பேசினர். ஆளுங்கட்சியினரோ "பொடோ"வால் என்னென்ன நன்மைகளெல்லாம் உண்டு என்பதைப்பற்றி ஆவேசமாகவே பேசினர்.

இதனால் இந்தக் கூட்டுக் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கை(மேஜை)த்தட்டலும் மாறி மாறி ஒலித்துக் கொண்டேஇருந்தன.

கடைசியாக பிரதமர் வாஜ்பாய் விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும்போதும் பெரும் அமளி நிலவியது.சோனியாவின் கேள்விக் கணைத் தாக்குதல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வாங்கு வாங்கென்று வாஜ்பாய்வாங்கிவிட்டார்.

"யாருடைய நிர்ப்பந்தத்திற்காகவாவது நான் அடிபணிகிறேன் என்றால் என்னை ஏன் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கவேண்டும்? என்னையும் என்னுடைய செயல்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றுஉணர்ச்சி பொங்க, கண்கள் துடிக்க, அனல் பறக்கப் பேசினார் வாஜ்பாய்.

"எனது முகமூடி கிழிந்து விட்டதாம்... விஸ்வரூபம் தெரிந்துவிட்டதாம்... ஒரு பிரதமரைப் பார்த்துஇப்படியெல்லாமா பேசுவார்கள்? நான் தினமும் பரீட்சை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அவற்றில் தினமும்வெற்றி பெறவும் செய்கிறேன்.

சோனியாவுக்கும் இந்திய அரசியலுக்கும் சம்பந்தமே இல்லாத காலத்தில்கூட அரசியல் தேர்வுகளில் நான் தேர்ச்சிபெற்றுத்தான் வந்துள்ளேன்" என்று வாஜ்பாய் ஆவேசமாகப் பேசியதையடுத்து, எதிர்க் கட்சி உறுப்பினர்கள்கோஷம் எழுப்பினர். வாஜ்பாய் தன்னுடைய பேச்சை வாபஸ் பெறவேண்டும் என்று கூக்குரல் எழுப்பினர்.

இதற்கும் பதிலளித்த வாஜ்பாய், "என்னுடைய நடத்தையையும் பேச்சுக்களையும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால்நேருவே அங்கீகரித்தார். அதற்குப் பின் இப்படி ஒரு குற்றச்சாட்டு என்மீது விழுந்ததில்லை. நானும் இவ்வாறுபேசியதில்லை.

இந்த அவையில் ஆட்சேபகரமாக நான் ஏதாவது பேசியிருந்தால் அவற்றை தாராளமாக நீக்கிக் கொள்ளலாம்.ஆனால் இந்தப் பேச்சுக்காக சோனியா மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கூறினார்.

வாஜ்பாயின் பேச்சு சபையை மீறவில்லை என்பதை எதிர்க் கட்சி உறுப்பினர்களே ஒப்புக் கொண்டதையடுத்து,இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து பொடோ சட்ட மசோதாவை வாக்கெடுப்புக்கு விட்டார் மக்களவை துணை சபாநாயகரும், கூட்டுக்கூட்டத்தின் தலைவருமான பி.எம். சயீது. ஆம், இல்லை மற்றும் நடுநிலை என்பதைக் குறிக்கும் மூன்று நிறங்களில்வாக்குச் சீட்டுகள் உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் எதிர்க் கட்சிகளான அதிமுகவும் (18 உறுப்பினர்கள்) தேசியவாதகாங்கிரசும் (11 உறுப்பினர்கள்) "பொடோ"வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இறுதியில் பொடோ சட்டத்திற்கு ஆதரவாக 425 வாக்குகளும், எதிராக 296 வாக்குகளும், நடுநிலையாக 60வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து நாடாளுமன்றத்தில் பொடோ சட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+