இந்தியக் "குடி"மகனுக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸை சேர்ந்த விமானத்தில் இந்தியர் ஒருவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவருக்கு 3 வாரசிறைத்தண்டனையும், ரூ.26,000 அபராதமும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த மாதத் துவக்கத்தில் பாரீசிலிருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சுமன் பரூவா (41) என்ற இந்தியர்பயணம் செய்தார். இவர் சிங்கப்பூரில் இறங்கி பிறகு கோல்கத்தாவுக்கு செல்வதாக இருந்தது.
ஆனால் விமானத்தில் அளவுக்கு அதிகமாக போதையுடன் இருந்த பரூவா, தனது சீட்டுக்கு எதிரே இருந்த டி.வியைஅடித்து நொறுக்கினார். மேலும் என்னய்யா சர்வீஸ் பாக்குறீங்க என்று கேட்டு பயங்கரமான சவுண்டு கொடுத்தார்.
இதையடுத்து இனிமேல் பரூவாவுக்கு குடிக்க எதையும் கொடுக்க வேண்டாம் என்று விமானப் பணியாளர்களுக்குவிமானி உத்தரவிட்டார்.
அதற்குப் பிறகும் போதை இறங்காத பரூவா, தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். இதைத் தொடர்ந்துவிமானியே அவருக்கு எச்சரிக்கைத் துண்டுச் சீட்டை அனுப்பினார்.
ஆனால் அந்தச் சீட்டில் கோணல் மாணலாகக் கிறுக்கிய பரூவா, அதைக் கிழித்துத் தூர எறிந்தார்.
இதையடுத்து பரூவா மீது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பரூவா அளவுக்கு அதிகமாக குடித்ததும், பயணிகளுக்கு தொந்தரவு செய்ததும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால்,அவருக்கு 3 வார சிறை தண்டனை விதித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பரூவாவுக்கு ரூ.26,000 அபராதமும், டி.வி.யை உடைத்ததற்காக ரூ.1,25,000 லட்சமும் அபராதமும்விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதேபோலவே கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு இந்திய இளைஞர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் அவருக்கு மூன்று மாதத்திற்கு மேல் சிறைத் தண்டனை கிடைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications