தமிழக அரசு ஊழியர்களுக்கும் வி.ஆர்.எஸ். திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் விதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான விருப்பு ஓய்வுத் திட்டத்தை சமீபத்தில்மத்திய அரசு அறிவித்தது.
அதேபோலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் இன்று (புதன்கிழமை) தாக்கல்செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விருப்ப ஓய்வுத் திட்ட அடிப்படையிலேயே தமிழக அரசின் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம்செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications