"பார்" லைசன்ஸ் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை
சென்னை:
மதுக் கடைகளில் பார்கள் வைத்துக் கொள்ள பட்ஜெட் அறிவிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மதுக் கடைஉரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தபோதிலும், அதற்காக உரிமக் கட்டணம் (லைசன்ஸ்) செலுத்த வேண்டுமேஎன்பதற்காக அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் பொன்னையன், 2002-03ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று (புதன்கிழமை)தாக்கல் செய்தார்.
மலிவு விலை மது நிறுத்தப்படும் என்று பட்ஜெட்டின்போது அறிவித்த பொன்னையன், ஆனால் மதுக் கடைகளிைல்பார்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.3 லட்சம், நகராட்சிகளில் ரூ.2 லட்சம், பேரூராட்சிகளில் ரூ.1 லட்சம் லைசன்ஸ் செலுத்திபார்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது.
பார் வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்ததால் மதுக் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும்லைசன்ஸ் செலுத்த வேண்டியுள்ளதே என்பதற்காக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மலிவு விலை மதுவை ஒழித்தாகி விட்டது, வியாபாரம் வேறு டல்லாக உள்ளது. இந்நிலையில் பார் வைக்கலைசன்ஸ் கட்டணம் கேட்டால் எங்கே போவது என்று அவர்கள் கேட்கின்றனர்.
மேலும், ஒரே பகுதியில் பல மதுக் கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் வியாபாரம் டல்லாகஇருப்பதாகவும் மதுக் கடைக்காரர்கள் ஏற்கனவே குமுறலுடன் உள்ளனர். உரிமக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
பார் அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் கட்டணம் கட்ட வேண்டும் என்ற அம்சம் அவர்களது சந்தோஷத்தைப்பாதியாக குறைத்துள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications