திமுகவுக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை: தமிழக பாஜக தாக்கு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் கிருபாநிதிகண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் உறவு முறிப்பு அறிவிப்பு குறித்து விவாதிக்க தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் தொடர்ந்துஇரண்டாவது நாளாக நேற்றும் (புதன்கிழமை) நடந்தது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் கிருபாநிதி கூறியதாவது:
பாஜகவுடனான உறவு முறிந்து விட்டதாகக் கருணாநிதி கூறியுள்ளது துரதிர்ஷடவசமானது. இருப்பினும் தேசியஅளவில் உறவு நீடிப்பதாக அவர் கூறியுள்ளதை மதிக்கிறோம்.
பாஜகவுடன் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் அதை பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல்நாகரீகமற்ற முறையில் பத்திரிக்கைகள் மூலமாக அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டாம்.
கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை பாஜக உடனடியாக கண்டித்தது. அவர்களைவிடுதலை செய்ய வேண்டும் என்று கோரி போராட்டமும் நடத்தி சில பாஜக தலைவர்கள் கைதாகியுமுள்ளனர்.
மத்திய அரசும் பல்வேறு உதவிகளை திமுகவிற்குச் செய்து வந்தது. தமிழக ஆளுநராக அப்போதிருந்த பாத்திமாபீவியைப் பதவியிலிருந்து நீக்கும் அளவுக்கு மத்திய அரசு உடனடியாகச் செயல்பட்டது. ஆனால் இதை திமுகஇதையெல்லாம் மறந்து விட்டது.
தன் உதவியை எப்போதெல்லாம் திமுக நாடியதோ அப்போதெல்லாம் மறுக்காமல் ஆதரவு அளித்துள்ளது பாஜக.பல விஷயங்களில் நீக்குப் போக்குடன் நாங்கள் நடந்து கொண்டும் அவற்றையெல்லாம் திமுக மறந்து விட்டதுஎன்றார் கிருபாநிதி.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications