"மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்த கதை": பட்ஜெட் குறித்து கருணாநிதி கிண்டல்
சென்னை:
மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்த கதையாக பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
2002-2003ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் புதன்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்குறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
கல்வித்துறை, விவசாயத்துறை போன்ற முக்கிய துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றுஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் சொல்லப்பட்டிருக்கும்.
திமுக, காங்கிரஸ், எம்.ஜி.ஆர். ஆட்சிகளில் படிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கைகளை பார்த்தால் இது தெரியும்.ஆனால் எது பற்றியும் குறிப்பிடாமல் மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான் என்பது போல் இப்போதுபட்ஜெட் அறிக்கை படிக்கப்பட்டிருக்கிறது.
புதிய வரி விதிப்புகளை வியாபாரிகளும், பொது மக்களும் தாங்கிக் கொள்வார்களா என்று தெரியவில்லை.அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
பார் இல்லாமல் இருந்தது. சில போலீஸ்காரர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் அது பயன்படுத்தப்பட்டது.இப்போது பார் வந்து விட்டால் சட்டம் ஒழுங்குக்கு மீறிய சம்பவம் நடக்கும்.
மானியம் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு இனி மானியம் நிறுத்தப்படும் என்று கூறியிருப்பது, ஏழைமாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
அன்னதானத் திட்டத்தோடு சேர்த்து ஆன்மீக வகுப்புகள் நடத்தப்படு என்று அறிவித்திருக்கிறார்கள். இதுமதப்போதனை என்ற அளவுக்கு போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இக்கருத்தை அதிமுகவின்ஆதரவாளராக இருக்கும் வீரமணியே தெரிவித்திருக்கிறார் என்று கருணாநிதி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications