காஷ்மீர்: மசூதிக்குள் புகுந்த தீவிரவாதி சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பட்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மசூதிக்குள் புகுந்த ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

ரெட்பெக் என்ற அந்தக் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று (புதன்கிழமை) அதிகாலை திடீர் சோதனைநடத்தினர்.

அவ்வாறு சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இன்று காலை சுமார் 8.30 மணிக்கு திடீரென்று ஒருவீட்டிலிருந்த சில தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபடவே, அந்தத் தீவிரவாதிகளும் தப்பி ஓடினர். இதையடுத்துபாதுகாப்புப் படையினரும் அந்தத் தீவிரவாதிகளைத் துரத்த ஆரம்பித்தனர்.

ஆனால் அந்தத் தீவிரவாதிகள் திடீரென்று அருகிலுள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து விட்டனர். இதையடுத்துபாதுகாப்புப் படையினர் அந்த மசூதியை முற்றுகையிட்டனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் மசூதிக்குள்ளிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

பின்னர் இன்று பிற்பகல் ஒருவழியாக ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சாட்பக் என்ற கிராமத்தைச் சேர்ந்த உமர் என்ற முகம்மது முதாசிர்தான் கொல்லப்பட்ட அந்தத்தீவிரவாதி என்பதும் அவன் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும் பிறகுதெரிய வந்தது.

அதன் பின்னர் மசூதிக்குள் சென்று சோதனையிட்ட பாதுகாப்புப் படையினர், அங்கு வேறு எந்தத் தீவிரவாதியும்ஒளிந்து கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+