தற்கொலை செய்த கோவை தம்பதியின் மகளுக்கு அரசு வேலை: ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் மகளுக்கு ரூ.1லட்சம் நிதியுதவி வழங்குவதோடு அவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு(45)-நளினி(41) தம்பதி ஜெயலலிதாவைச் சந்தித்து வேலை கேட்டு மனுகொடுப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர்.
ஆனால் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர்களால் முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதியினர் நேற்று(புதன்கிழமை) தலைமைச் செயலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் மகள் உமாவுக்கு முதல்வர் நிவாரணநிதியிலிருந்து ரூ.1.லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் உமாவின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோயம்புத்தூர் மாவட்டகலெக்டருக்கு ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
சென்னை கோட்டையில் கோவை தம்பதி விஷமருந்தி தற்கொலை












Click it and Unblock the Notifications