சென்னை கோட்டையில் கோவை தம்பதி விஷமருந்தி தற்கொலை
சென்னை:
கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு(45)-நளினி(41) தம்பதி நேற்று (புதன்கிழமை) தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து மனு கொடுப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு வந்தனர்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் கார்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோதுஇந்தத் தம்பதியர் கோட்டை வளாகத்திற்குள் நுழைந்தனர்.
பின்னர் அந்தத் தம்பதியர் திடீரென்று தங்கள் கையில் வைத்திருந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்த விஷத்தைக்குடித்துவிட்டு மயங்கி சரிந்தனர்.
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்து அதிர்ந்து போன கோட்டைவளாகத்திற்குள் இருந்தவர்கள், அந்தத் தம்பதியரை உடனடியாக சென்னை அரசு மருத்துவனையில் அள்ளிக்கொண்டுபோய்ச் சேர்த்தனர்.
>ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு வேலு உயிரிழந்தார். அவருடைய மனைவி நளினியும் இன்றுஅதிகாலை பரிதாபமாக மரணமடைந்தார்.
எதற்காக இந்தத் தம்பதியர் கோட்டைக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுகொடுப்பதற்கு அங்குள்ள போலீசார் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஷம் குடித்த தம்பதியரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் கோட்டை வாசலில் காவலுக்கு நின்றபோலீசார் மிகவும் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறினார்.
தற்கொலை செய்த கோவை தம்பதியின் மகளுக்கு அரசு வேலை: ஜெ. உத்தரவு
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications