“மிஸ்டு கால் கொடுத்து சேர்க்கிற செட்டப் இங்கு கிடையாது!” அண்ணாமலை பேச்சால் பாஜக ஷாக்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் இணைய யாருக்கும் நான் போன் செய்து அழைக்கவில்லை என்றும், மிஸ்டு கால் கொடுப்பது போன்ற நடைமுறை இந்த அமைப்பில் இல்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜகவிலிருந்து விலகி வந்திருந்த அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தன்னுடைய 'வீ த லீடர்ஸ்' அமைப்பை வலுப்படுத்த தொடங்கியிருக்கிறார்.

Annamalai

முதல் மாநாடு

இந்த அமைப்பில் இதுவரை மொத்தம் 19 லட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். எப்போது 50 லட்சம் பேர் இதில் இணைகிறார்களோ! அப்போது இந்த அமைப்பின் அரசியல் பணி தொடங்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இப்படி இருக்கையில், இன்று கோவை பொள்ளாச்சியில் போதை ஒழிப்பு மாநாட்டை 'வீ த லீடர்ஸ்' இந்த அமைப்பின் சார்பில் அண்ணாமலை நடத்தியிருக்கிறார்.

அண்ணாமலையின் பேச்சு

இதில் பேசிய அவர், "நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும். நம்முடைய இலக்கில் 50% -ஐ நெருங்கிவிட்டோம். ஆனால், இன்னும் நிறைய பேரை இதில் இணைக்க வேண்டும். நான் யாரையும் போன் செய்து இந்த அமைப்பில் சேர வலியுறுத்தவில்லை. நீங்களும் யாரையும் கூப்பிட வேண்டாம். எங்கோ மரம் வைக்கிறார்கள்.. எங்கோ போதைக்கு எதிரான விழிப்புணர்வை நடத்துகிறார்கள்.. என நம்முடைய வேலையை பார்த்து அவர்கள் வரட்டும்.

50 லட்சம் பேர் இலக்கு

இந்த அமைப்பில் 50 லட்சம் பேர் இணையும்போதுதான்.. தமிழ்நாடு நம்மை அழைக்கிறது என்று அர்த்தம். நாம் யாரையும் போர்ஸ் செய்யக்கூடாது. ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு போய்.. நாமாக அவர்களை இணைப்பது, மிஸ்டு கால் கொடுக்கிறோம் வாங்க.. அப்படியெல்லாம் கிடையாது. 50 லட்சம் பேர் அவர்களாக இந்த மாற்றத்திற்கு.. நாங்கள் துணை இருப்போம் என்று அவர்கள் வருகிறபோதான் எல்லாம் நடக்கும்.

அடுத்த 6 மாதம்

அடுத்த 6 மாத காலத்திற்கு நம்முடைய இலக்கு தெளிவாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கான மாதம். 50 லட்சம் மரக்கன்றுகளை நடப்போகிறோம். செப்டம்பர் மாதம் பெண்களின் பாதுகாப்புக்கான இயக்கம். இப்படி 6 மாத காலம்.. 6 முக்கியமான பிரச்சனைகளை எடுத்து.. அடுத்த 6 மாதங்களுக்கு செயல்பட இருக்கிறோம். தனி மனிதனாக நாம் செயல்படும்போது நிச்சயம் மாற்றம் ஏற்படும்" என்று பேசியிருக்கிறார்.

பாஜக மீது அட்டாக்

எல்லாம் ஓகேதான்.. ஆனால் போகிற போக்கில்.. மிஸ்டு கால் கொடுத்து இணைக்கும் செட்டப் இல்லை என்று.. பாஜகவை தாக்கி அண்ணாமலை பேசியிருப்பதை அக்கட்சியின் தலைவர்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. விஜய்யின் அரசியல் அமைப்பை பலவீனப்படுத்தி அந்த இடத்தில் மாற்று அரசியல் சக்தியாக அண்ணாமலை உருவாக வேண்டும்.. அதன் மூலம் தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவு செய்துக்கொள்ளலாம் என்று பாஜக யோசித்து வருகிறது. இப்படி இருக்கையில் அண்ணாமலையின் பேச்சு பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+