தவெக ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.. எதிர்க்கட்சிகள் திட்டம் பிளாப்.. திருமாவளவன் திகுதிகு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் அந்த அரசியல் பிரச்சனை ஓயவில்லை. தவெக அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
தவெக 6மாத ஆட்சி
சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் சில கருத்துகளை வைக்கிறார்கள். அதே கருத்தை தான் விசிகவும் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் உரிய அணுகுமுறையில் சுட்டுக்காட்டுகிறோம். குற்ற சம்பவங்களை தடுக்க உரிய கவனம் செலுத்தி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டும். ஆட்சி 6 மாதம் தான் நடந்துள்ளது. என்றாலும் கூட இதில் ஏராளமான படிப்பினைகளை பெற்றிருக்க வாய்ப்புள்ளது. அதை வைத்து ஆட்சி நிர்வாகத்தை திறம்பட செய்ய வேண்டும் என்கிற கருத்தை சுட்டி காட்டி வருகிறோம். இதில் நாங்கள் போராட வேண்டிய அவசியமில்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் போராடலாம். ஆளுங்கட்சி கூட்டணியில் சுட்டி காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டி காட்டுவோம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை
ஆளுநர் டெல்லி பயணம் செல்வது வழக்கமான ஒன்று. வியூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. சட்ட விரோத நடவடிக்கை எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. திமுக, அதிமுக ஆட்சியில் மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்போதும் அது தொடர்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. முதலமைச்சருக்கு அது முதன்மையான கடமையாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த, குற்றம் சாட்டியவர்கள் யாரும் தப்பித்து விடக்கூடாது.செக்கானூரணி காவல் நிலையத்தில் கூட ஒருவர் தற்கொலை செய்துள்ளார். சிலரை சஸ்பெண்ட் செய்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளனர். குற்ற செயல்கள் தடுக்க உரிய வழிகாட்டுதல் தருவது அரசின் கடமை. முதலமைச்சர் வசமுள்ள துறை என்றடிப்படையில், காவல் கஸ்டடி மரணங்களை
தடுப்பதற்கு கூடுதல் நடவடிக்கை காலத்தின் கட்டாயம்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல். அவர்கள் கொண்டு வரட்டும். ஆனால் அந்த தீர்மானம் வெற்றி பெறாது. ஆட்சி எந்த சூழலிலும் கவிழ வாய்ப்பில்லை. மேகதாது அணை கட்ட கர்நாடகா விவசாயிகளை உடன்படவில்லை. அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வல்லுநர்களே அதை சொல்கிறார்கள். தமிழக அரசின் இசைவு இல்லாமல் அந்த அணையை கட்டவே முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications
