நான் இந்து விரோதியா? தவெக அரசை பாராட்டியது ஏன்? ஓபனாக பேசிய அண்ணாமலை
கோவை: கரூரில் இனாம் நிலத்தை அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்த தவெக அரசின் செயலை வரவேற்றதற்கு என்னை இந்து விரோதி என்கிறார்கள் என்று வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது முதல் மாநாட்டில் ஆவேசமாக பேசினார். கோவை பொள்ளாச்சியில் வி த லீடர்ஸ் அமைப்பின் போதை இல்லா தமிழகம் என்ற பெயரில் முதல் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை பேசியதாவது:-
கரூரில் இனாம் நிலத்தை கொடுத்துட்டாங்க.. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனாம் நிலத்தை கொடுத்துட்டாங்க.. நீங்க அதற்கு தவெக அரசுக்கு சப்போர்ட் பண்ணி அறிக்கை விடுறீங்க.. நீங்க கோவிலுக்கு எதிரானவரா? என்று கேட்கிறார்கள். விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து இனாம் நிலங்கள் என்பது அந்த ஊரில் கோவிலில் வேலை செய்பவர்களுக்கு அரசு கொடுத்தது.

அண்ணாமலை இந்து விரோதி
கோவிலில் பூ விற்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், தவில் வாசிப்பவர்கள் அவுங்களுக்கு கொடுக்கப்பட்டது. காமராஜர் 1963 ல் ஆட்சியில் இருந்து போவதற்கு முன்னால் செட்டில்மெண்ட் தாசில்தார் போட்டு பஞ்சாயத்து பண்ண முயற்சி செய்தார். அதை திமுக காரங்க அதை வச்சி பாலிடிக்ஸ் பண்ணி பண்ணி, கோவில் நிலம், இந்து நிலம் ஒன்னா சேர்த்து ஜீரோ டிகிரி என போட்டு பண்ணாமல் வைத்து இருந்தார்கள்.
இன்று ஒரு அரசு வந்து 60 ஆண்டுகளாக 100 ஆண்டுகளாக அந்த இனாம் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு திரும்ப அந்த மரியாதை கொடுக்கும் பொழுது அதை வரவேற்க வேண்டியது தமிழனுடைய கடமையாகத்தன் பார்க்கிறேன். கோவில் நிலத்தை மீட்போம்.. கோவில் நிலத்திற்கும் இனாம் நிலத்திற்கும் சம்மந்தம் இல்லை. இதற்கு எனக்கு கிடைத்து இருக்க கூடிய பட்டம் அண்ணாமலை இந்து விரோதி..
அப்போ ஹெச் ராஜா யார்?
அப்படிப்பட்ட இந்து விரோதி என்று எனக்கு பட்டத்தை கொடுத்தீர்கள் என்றால் அந்த பட்டத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. இதே ஹெச். ராஜா அக்டோபர் 2024-ல் கரூர் வந்து இனாம் நிலத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் இந்து விரோதி இல்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னார். அவர் இந்து விரோதி இல்லை. ஆனால் இன்னைக்கு நியாயமாக நான் சொன்னால் இந்து விரோதி.
மதம் என்பது இந்த அமைப்பிற்கு வெளியே.. சாதி என்பது இந்த அமைப்பிற்கு வெளியே.. சாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டு காலம் அரசியல் செய்தது போதும். உங்கள் மதம் உங்களுக்கு பெரியது. என் மதம் எனக்கு பெரியது. அதை வீட்டில் பூட்டிவிட்டு வெளியே வரும் போது அனைவருக்கும் பொதுவான சமமான ஒரு மனிதனாக நமது வாழ்க்கை இருக்கட்டும்.. என்று பேசினார்.














Click it and Unblock the Notifications