சென்னையில் இன்று இரவு 10 மணி வரை விட்டு விளாச போகுது மழை.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், நாகை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அவ்வப்போது மாலை நேரங்களில் மழை பெய்தது. எனினும் மற்ற நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது.

Rain Alert Till 10 PM Tonight for Chennai and 8 Other Districts - Meteorological Department

9 மாவட்டங்கள் என்னென்ன?

இந்த நிலையில் தான் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் இன்று, நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கான அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தில்,
கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+