ஆனந்த் அம்பானி ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. அட, தெலுங்கில் அப்படி கேட்டதுமே.. வியந்த சந்திரபாபு நாயுடு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: "என்னை ஆந்திராவின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.. இந்த மாநிலத்துக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டிருக்கிறார் அனந்த் அம்பானி. இதை சொன்னதோடு நிற்கவில்லை. ஆந்திராவில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு, 3 லட்சம் பேருக்கு வேலை எனப் பெரிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

மதனப்பள்ளியில் நடந்த ராயலசீமா தோட்டக்கலை மையம், இந்திய வேளாண் பள்ளி தொடக்க விழாவில் பேசும்போதுதான் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆந்திராவில் விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கும் ஆலைகளை அமைக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த ஆலைகள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், அடுத்த சில தசாப்தங்களில் மாநிலத்துக்கு ரூ.60,000 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கும் என்றும் அனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

anant ambani

விவசாயிகள் உணவு உற்பத்தி செய்வதோடு, நாட்டுக்குத் தேவையான எரிசக்தியையும் உருவாக்க உதவ வேண்டும் என்பதே ஆனந்தின் கருத்தாகும்..

தொடர்ந்து அவர் பேசும்போது, "இந்திய வேளாண் பள்ளி மூலம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.. இந்தியா உலகத்துக்கு பல சிஇஓக்களை உருவாக்கியுள்ளது; இனி இந்தப் பள்ளி ஒரு விவசாயியை அவரது வயலுக்கே சிஇஓவாக மாற்றும்.. ஏஐ, ட்ரோன், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளின் பாரம்பரிய அறிவுடன் இணைக்க வேண்டும், பயிர் நிலை, பூச்சித் தாக்குதல், விற்பனை நேரம் போன்றவற்றிலும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு உதவும்" என்கிறார் ஆனந்த் அம்பானி.

விவசாயிகளுக்கு ஜியோ உதவி!

விவசாயத்திலும் டெக்னாலஜியை பயன்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது... செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், ரோபோக்கள் மூலம் விவசாயத்தை எளிதாக்கவும், ஜியோ கிரிஷி தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராமங்களில் ஆன்லைன் வகுப்புகள், கால்நடை வளர்ப்புக்கான உதவிகள் எனப் பல திட்டங்களும் உள்ளன.

மதனப்பள்ளி தக்காளி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எப்போது, எங்கே விற்பனை செய்யலாம் என்பதற்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.

இன்னொரு ரூ.1 லட்சம் கோடி திட்டம்!

இதே விழாவில் தொடங்கப்பட்ட ராயலசீமா தோட்டக்கலை மையத்தின் திட்ட மதிப்பும் ரூ.1 லட்சம் கோடி. இதில் ரூ.40,000 கோடி மத்திய அரசின் உதவி, ரூ.60,000 கோடி தனியார் முதலீடு. இது ரிலையன்ஸ் முதலீட்டிலிருந்து தனியானது. ராயலசீமாவில் 6 லட்சம் ஏக்கரில் தோட்டக்கலைப் பயிர்களை வளர்க்கவும், 5,860 கிராமங்கள், 201 கிளஸ்டர்களை இந்தத் திட்டத்தில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் குவியும் முதலீடுகள்!

2024 ஜூன் முதல் ஆந்திர அரசு 388 பெரிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகம். இதன் மூலம் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3-ல் ஒரு பங்கு முதலீடு ராயலசீமாவுக்குச் செல்லும் என அனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

1 லட்சம் கோடி முதலீட்டைவிட இதில் இன்னொரு ஸ்பெஷலும் உள்ளழத.. தனது பேச்சைத் தெலுங்கில் தொடங்கி, தெலுங்கிலேயே முடித்த ஆனந்த் அம்பானி, ஆந்திராவின் மகனாகத் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டாராம்.. உடனே சந்திரபாபு நாயுடு அவரைக் கட்டித்தழுவிப் பாராட்டியிருக்கிறார்.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் ஆனந்தை மகிழ்ந்து பாராட்டினார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+