திடீரென 12,500 அடி கீழிறங்கி மாயமான விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பாஸ்டன்: பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற மருத்துவ விமானம் திடீரென்று ரேடாரில் இருந்து விலகியது. 3 நிமிடத்தில் 12,500 அடி உயரம் வரை கீழிறங்கிய விமானம் மாயமானது. இதனால் விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை.

bermuda-boston-flight-missing-with-6-people-search-operation-going-on

பெர்முடாவில் இருந்து இன்று அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசாச்சூட்ஸ் தலைநகர் பாஸ்டன் நகருக்கு Gulfstream G100 என்ற விமானம் புறப்பட்டது.

இது ஒரு மருத்துவ விமானமாகும். மருத்துவ உபகரணங்கள், அவசர கால உதவிகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானம் அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்டன் நகரில் அதிகாலை 1.25 மணிக்கு தரையிறங்க வேண்டும். விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்தனர். நான்டக்கெட் அருகே கடற்கரையின் மேல்புறம் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று இந்த விமானம் தொடர்பை இழந்தது.

இதனால் அந்த விமானம் எங்கே சென்றது? விமானத்தில் பயணித்த 6 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இந்த விமானத்தை தேடும் பணியில் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை ஈடுபட்டு வருகிறது.

இதுபற்றி FlightAware முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இந்த விமானம் ''அதிகாலை 1.03 மணிக்கு இந்த விமானம் வானில் 23,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. 3 நிமிடத்தில் அதன் உயரம் 11,000 அடியாக குறைந்தது.

இதுபற்றி ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படை அளித்துள்ள தகவலில், ''இன்று அதிகாலையில் பெர்முடாவில் உள்ள எல் எூப் வேட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாஸ்டன் நகரில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்துக்கு கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி 100 விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் திடீரென்று தொடர்பை இழந்துள்ளதால் அதனை தேடி வருகிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+