சென்னை: அண்ணா மேம்பாலத்தில் பஸ்-லாரி மோதல் - 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர்பயங்கரமாக மோதிக் கொண்டதில் மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகவேஇருக்கும். ஆனால் இரவு நேரத்தில் இந்த மேம்பாலம் படு அமைதியாக இருக்கும்.

நேற்று நள்ளிரவில் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி ஒரு பஸ் படு வேகமாக வந்து கொண்டிருந்தது.எதிர்த் திசையில் ஒரு கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

இந்த இரண்டு வாகனங்களும் அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இவைஇரண்டும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இவ்விபத்தில் லாரி டிரைவரும் ஒரு பஸ் பயணியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த 18 பேர் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில்ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+