தமிழகத்தில் "ஹோலி... ஹோலி... ஹோலி"
சென்னை:
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் வட இந்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இந்த ஹோலிப் பண்டிகைவண்ணமயமாகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான செளகார்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும்புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஹோலியை மக்கள் குதூகலத்துடன் கொண்டாடினார்கள்.
இப்பகுதியில் உள்ள வட இந்திய இளைஞர்களும் இளைஞிகளும் மட்டுமல்லாமல் தமிழகஇளைஞ-இளைஞிகளும் வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் மற்றொருவர் பூசிக் கொண்டு ஆடிப் பாடினார்கள்.
மதுரையிலும் ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்படிக்கும் வட இந்திய மாணவ-மாணவிகள் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, ஆடிப்பாடிமகிழ்ந்தனர்.
பெங்களூரில் உள்ள வட இந்தியர்களும் ஹோலிப் பண்டிகையைப் படு குதூகலத்துடன் கொண்டாடினார்கள்.












Click it and Unblock the Notifications