காவலரை அறைந்த பெண் போலீஸ் அதிகாரி: ஆயுதப்படை போலீசார் பணிப் புறக்கணிப்பு
மதுரை:
மதுரையில் ஆயுதப்படை காவலரைக் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெஜினாவை பணிநீக்கம் செய்யக் கோரி ஆயுதப்படை போலீசார் நேற்று (வியாழக்கிழமை) வேலைக்குச் செல்லாமல் போராட்டம்நடத்தினர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆயுதப்படை போலீஸ் காவலராக இருப்பவர் வன்னியன். இவர் தனக்குசல்யூட் அடிக்காததால் அவரை ரெஜினா கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தன்னுடைய காது பாதிக்கப்பட்டிருப்பதாக வன்னியன் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் மதுரைஆயுதப்படைப் போலீசாரிடையே பெரும் ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வன்னியனைத் தாக்கிய ரெஜினா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மதுரை ஆயுதப்படைப் போலீசார் நேற்று வேலைக்குச் செல்லாமல் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்நடத்தினர்.
மதுரை மாநகரப் போலீஸ் கமிஷனரான சூர்ய பிரகாஷ் அவர்களிடம் நேரில் வந்து பேசிப் பார்த்தும்பலனளிக்கவில்லை. போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர்கள், திரும்பவும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே ரெஜினா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் அடுத்தகட்டப் போராட்டம் குறித்துவிரைவில் அறிவிக்கப் போவதாகவும் ஆயுதப்படைப் போலீசார் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications