நாளை தூத்துக்குடி செல்கிறார் ஜெ.
சென்னை:
தூத்துக்குடி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகதமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) அங்கு செல்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, சங்கரலிங்கபுரத்தில் பயங்கரவன்முறை ஏற்பட்டது.
வன்முறையைக் கட்டுப்படுத்த அங்கு காவலுக்குச் சென்ற ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை வன்முறைக் கும்பல்அடித்துக் கொன்று விட்டது.
இதையடுத்து சங்கரலிங்கபுரத்தில் குவிக்கப்பட்ட போலீசார், அங்குள்ள பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகவும் மக்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் சங்கரலிங்கபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக நாளை அங்குசெல்கிறார் ஜெயலலிதா.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நாளை காலை மதுரைக்குச் செல்லும் ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்துகார் மூலம் தூத்துக்குடிக்குச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications