பாகிஸ்தானில் பின் லேடன் கூட்டாளி கைது

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் நெருங்கிய கூட்டாளி ஒருவனைப் பாகிஸ்தான்-அமெரிக்ககூட்டுக் கமாண்டோக்கள் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் கமாண்டோ படையினர் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் முழுவதும்மறைந்துள்ள அல்-கொய்தா தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

அமெரிக்க உளவுத்துறை தந்த தகவல்களின் அடிப்படையில் இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று பைசலாபாத்திலும் லாகூரிலும் இந்தக் கூட்டுக் கமாண்டோ படையினர் வீடு வீடாக அதிரடிசோதனை நடத்தினர்.

அப்போது சில அல்-கொய்தா தீவிரவாதிகள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். சிலர் கமாண்டோக்கள் மீது பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட சண்டையில் சில தீவிரவாதிகள் குண்டடி பட்டுக் கீழே விழுந்தனர். அவ்வாறு விழுந்தவர்களின்ஒருவன்தான் அபு சுபைதா என்பவன். இவன் பின் லேடனின் மிக நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.

இதுவரை 65 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தேடுதல் வேட்டை தற்காலிகமாகநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உஷாராகிய அல்-கொய்தா தீவிரவாதிகள் பலர், தற்போது தங்களுடைய மறைவிடங்களை மாற்றிக் கொண்டுவிட்டதால், இவ்வேட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் "தி நியூஸ்"பத்திரிக்கை தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+