பத்தி கம்பெனி பெயரில் "பலே" விபச்சாரம்: 9 பெண்கள் கைது
சென்னை:
சென்னையில் ஊதுபத்தி கம்பெனி பெயரில் விபச்சாரம் செய்த 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் கடற்கரை ஓரத்தில் ஒரு பங்களாவில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடவதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அந்த வீட்டின் முன் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம்செயல்படுவதாக பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பெளர்ணமியன்று, நிலா ஒளியில் படகில் சென்று நடுக்கடலில் சல்லாபம் புரிவதாகவும் போலீசாருக்குதகவல் வந்தது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை பெளர்ணமி என்பதால், நள்ளிரவில் அந்த பங்களா வீட்டை சுற்றி போலீசார்மாறுவேடத்தில் காத்திருந்தனர்.
அப்போது நிலவொளியில் நடுக்கடலில் படகில் உல்லாசமாக இருந்து விட்டு 4 வாலிபர்கள் மற்றும் சில பெண்கள்அந்த பங்களா வீட்டுக்குள் புகுந்ததும், போலீசார் சுற்றி வளைத்தனர்.
அங்கு அரைகுறை ஆடைகளில் இருந்த 9 பெண்கள் மற்றும் சில வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.அவர்கள் விபச்சாரத்திற்குப் பயன்படுத்திய மாருதி காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த நிரஞ்சன்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விபச்சாரம் நடத்தியதாக சென்னையில் 30 பெண்களை போலீசார் கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications