மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அக்டோபரில் துவக்கம்
திருச்சி:
மதுரை உயர் நீதிமன்ற கிளை வருகிற அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்.
நீதிபதி சுபாஷன் ரெட்டி வெள்ளிக்கிழமை திருச்சி காவேரி பெண்கள் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்த பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் உயர் நீதிமன்ற கிளை அமைப்பதற்கு கட்டிட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கட்டடவேலைக்கு முதல் கட்டமாக தமிழக அரசு சுமார் ரூ.45 கோடி அனுமதித்து உள்ளது.
கட்டட பணிகள் வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிவடையும் என்று கூறி உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம்மதுரையில் உயர் நீதிமன்ற கிளை செயல்படும் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் 48 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல்மாதத்தை வழக்குகளை விரைந்து முடிக்கும் மாதமாக கடைபிடிக்குமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதுஎன்று சுபாஷன் ரெட்டி கூறினார்.












Click it and Unblock the Notifications