துபாய் துறைமுகத்தில் விபத்து: 9 இந்தியர்கள் பலி
துபாய்:
துபாய் துறைமுகத்தில் இரும்பு தடுப்புக் கதவுகள் உடைந்ததால் புகுந்த கடல் நீரில் மூழ்கி ஒன்பது இந்தியர்கள்உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
துபாய் துறைமுகத்தில் கப்பல்களைப் பழுது பார்ப்பதற்காக ஒரு பகுதி உள்ளது. அங்கு கடல் நீர் புகுந்து விடாமல்இருப்பதற்காக பெரிய பெரிய இரும்புக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை அங்கு ஐந்து கப்பல்களைப் பழுது பார்க்கும் பணியில் சுமார் 500 தொழிலாளர்கள்ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கிருந்த இரண்டு இரும்பு தடுப்புக் கதவுகள் உடைந்ததால் பயங்கரச் சத்தத்துடன் கடல் நீர்புகுந்தது.
இவ்விபத்தில் கடல் நீருக்குள் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒன்பது பேர் இந்தியர்கள். இறந்தஇந்தியர்களில் சிலர் தமிழர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்து, மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்களைத் தவிர வி. கேசவன், பி. பழனி, டில்லி கணேஷ், இவான் சுமதி உள்ளிட்ட பலரைக் காணவில்லை.அவர்களும் கடல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் கேசவனும் பழனியும் தமிழர்கள்என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications