கோயம்புத்தூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: ஜெ.
மதுரை:
கோயம்புத்தூர் அமைதியாக உள்ளதாகவும் அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தமிழக முதல்வர்ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) கூறினார்.
தூத்துக்குடி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்திற்கு இன்று பகல் சென்ற ஜெயலலிதா, அங்கு வன்முறையால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்துவிட்டு மதுரை திரும்பினார்.
பின்னர் சென்னை திரும்புவதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
சங்கரலிங்கபுரத்திற்குக் கிளம்புவதற்கு முன் கோயம்புத்தூர் நிலை குறித்து அம்மாவட்ட கலெக்டரிடமும் போலீஸ்அதிகாரிகளிடமும் பேசினேன்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவினாலும், தற்போதுகோயம்புத்தூர் அமைதியாகவும் கட்டுக்குள்ளும் உள்ளது.
கோயம்புத்தூர் நிலை குறித்து கவலைப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை என்றார் ஜெயலலிதா.
பின்னர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சென்றார்.
ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோயம்புத்தூரில் இன்று முழுஅடைப்பு நடைபெறுகிறது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications