மதுரை: அறை விட்ட பெண் போலீஸ் அதிகாரி, அறைபட்ட காவலர் சஸ்பெண்ட்
மதுரை:
ஆயுதப் படை காவலரைக் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் அந்தக் காவலரும்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மெமோவும் வழங்கப்பட்டது.
மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் ஆயுதப் படை போலீசாக இருப்பவர் வன்னியனை கடந்ததிங்கள்கிழமை அதே போலீஸ் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் ரெஜினா கன்னத்தில்அறைந்தார்.
தனக்கு சல்யூட் அடிக்காத காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையின்போதுதான் ரெஜினா அவரைக் கன்னத்தில்அறைந்துள்ளார். ரெஜினா அப்போது மப்டியில் இருந்ததால் அவரை அடையாளம் தெரியவில்லை என்றுவன்னியன் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆயுதப் படை போலீசார் போராட்டத்தில் குதித்தனர். வியாழக்கிழமை பணிப் புறக்கணப்புப்போராட்டமும் நடத்தி, ரெஜினா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் அறை வாங்கிய வன்னியன் மற்றும் அறை கொடுத்த ரெஜினா ஆகிய இருவரையுமே சஸ்பெண்ட்செய்தார் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சூர்ய பிரகாஷ். மேலும் அவர்கள் இருவருக்கும் மெமோவும்கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications