திமுக-காங்கிரஸ் கூட்டணியா? - இளங்கோவன் பதில்
மதுரை:
திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து மதுரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இளங்கோவன் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் இருந்து திமுக முழுமையாக உறவை துண்டிக்க வேண்டும். அவர் மதவாத சக்திகளை எதிர்த்துமுழுமையாக செயல்பட வேண்டும்.
காங்கிரஸ், திமுக உறவு குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு கூற முடியும். இடைத் தேர்தல் தேதி அறிவித்தபின்னர் தான் அதற்கான கூட்டணி குறித்தும் அறிவிக்க முடியும்.
காங்கிரசுடன் தமாகாவை இணைப்பது தொடர்பாக 18 மாதங்களாக பேசி வருகிறேன். தமாகா தலைவர் வாசன்இதுகுறித்து தெளிவாக எதையும் கூறவில்லை.
ப.சிதம்பரமும் காங்கிரஸில் இணைய வேண்டும். அவர் தனிக்கட்சியாக செயல்பட்டு பிரயோஜனமில்லை.
காங்கிரசின் அகில இந்திய பொது செயலாளர் ரமேஷ் சென்னிதாலா ஏப்ரல் 1ம் தேதி சென்னை வருகிறார். அவரைவாசன் சந்திப்பதாக உள்ளது.
காங்கிரசுடன், தமாகா இணைப்பு குறித்து அவர்கள் பேசுவார்களா என்று எனக்கு தெரியாது என்று இளங்கோவன்கூறினார்.












Click it and Unblock the Notifications