கண்ணகி சிலையைப் பாக்கணுமா? - "தம்பி"யை கூப்பிடுங்க!
சென்னை:
கண்ணகி சிலை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அதைப் பார்க்க விரும்புபவர்கள்கல்வி அமைச்சர் தம்பிதுரையை நாடலாம் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அதிமுக அரசு சில மாதங்களுக்கு முன்பு அகற்றியது. அந்தசிலை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருப்பதாக அதிமுக அரசு கூறியது.
ஆனால் அந்த சிலையை பார்க்க யாரையும் அரசு அனுமதிக்கவில்லை. இது குறித்து இன்று நடந்த பட்ஜெட்விவாதத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
கண்ணகி சிலை எங்கு உள்ளது, அதை பார்க்க ஏன் பத்திரிக்கையாளர்களை கூட அனுமதிக்கவில்லை என்று திமுகஎம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில் கூறியதாவது:
கண்ணகி சிலை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது. பார்க்க விரும்புபவர்கள், அமைச்சர்தம்பிதுரை அனுமதியுடன் கண்ணகி சிலையை பார்க்கலாம்.
கண்ணகி சிலையை திரும்பவும் நிறுவுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்குமுடிந்த பிறகு நீதிமன்றம் சொல்லும் இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications