கடலூர் அருகே சாராய வியாபாரி படுகொலை: 4 பேர் சரண்
கடலூர்:
புவனகிரி கடைவீதியில் பிரபல சாராய வியாபாரி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி தங்கமணி (45). அதே ஊரை சேர்ந்த முருகன்,பாண்டியன், முத்து, மன்சூர் அலி ஆகியோர் இவர் சாராயம் விற்பதற்கு இடையூறாக இருந்துள்ளனர்.
இதனால் அவர்கள 4 பேரையும் கொலை செய்ய தங்கமணி திட்டமிட்டுள்ளார். அதற்காக அடியாட்களையும்ஏற்பாடு செய்துள்ளார்.
இதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். தங்களை தீர்த்துக்கட்ட ஆட்கள்நியமித்த தங்கமணியை அந்த 4 பேரும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் போக்குவரத்து அதிகமாக இருந்த புவனகிரிகடைவீதியில் தங்கமணி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் 4 பேரும் உருட்டுக்கட்டை, கத்தியுடன் சென்று தங்கமணியை சரமாரியாக வெட்டினர்.இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இந்த சம்பவம் நூற்றுக்கணக்கான மக்கள் கண் முன்னே நடந்தது.
பிறகு நான்கு பேரும் சாலையில் பொறுமையாக நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இந்தசம்பவம் புவனகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications