என் சம்பளம் முழுவதும் அன்னதானத் திட்டத்திற்கே: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமீபத்தில் தமிழக கோவில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அன்னதானத் திட்டத்திற்கு தனது சம்பளம்முழுவதையும் தரப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா, தனக்கு சம்பளமாக ஒருரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை அரசுக்கே கொடுத்தார்.

இம்முறையும் தனது சம்பளத்தை அவர் பெறப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 63கோவில்களில் துவக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டத்திற்கு, தனது சம்பளத் தொகை முழுவதையும் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

இது தொடர்பாக சட்டசபையில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:

முதல்வர் என்ற முறையில் எனக்கு கிடைக்கும் மாதச் சம்பளத்தை அன்னதானத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாதமும்,ஒவ்வொரு கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

இதே போல, சட்டசபை உறுப்பினர்களும் தங்களது சம்பளத்தை நன்கொடையாக கொடுக்க முன்வந்தால்வரவேற்பேன் என்று ஜெயலலிதா கூறினார்.

தமிழக முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு ரூ.10,000 கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+