பாமகவை வம்புக்கு இழுக்கும் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து சீண்டி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழக சட்டசபையில்இரண்டாவது முறையாக நேற்றும் (புதன்கிழமை) பாமகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார் அவர்.

சில நாட்களுக்கு முன் சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது, மத்திய அமைச்சரவையில் இடம் பெற கடும்முயற்சிகளைச் செய்து வருகிறது பாமக. இது உண்மை இல்லை என்றால் மத்திய அரசின் தனியார் மயமாக்கக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்த அக்கட்சி தயாரா என்று கேள்வி கேட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை மறுபடியும் பா.ம.கவை வம்புக்கிழுத்தார் ஜெயலலிதா. பாமக உறுப்பினர்கோவிந்தசாமி பேசுகையில், சட்டசபை பாமக தலைவர் ஜி.கே. மணியின் பெயரை முதலில் சொல்லி நன்றி கூறிவிட்டு அதற்கு அடுத்ததாக பாமக நறுவனர் டாக்டர் ராமதாசின் பெயரைக் கூறியும் நன்றி தெரிவித்து பேச்சைத்தொடங்கினார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, உறுப்பினர் கோவிந்தசாமி தனது தலைவர் டாக்டர் ராமதாசின் பெயரைஇரண்டாவதாகக் கூறியுள்ளார். இதனால் மணிக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடப் போகிறது என்று கூறிஅமர்ந்தார்.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, தனக்கு பேச வாய்ப்பு கொடுத்த ஜி.கே. மணிக்கு முதலில் நன்றி கூறவிரும்பியிருப்பார் கோவிந்தசாமி. அதனால் அவரது பெயரை முதலில் கூறியிருக்கலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து கோவிந்தசாமி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+