இந்தியா- சிங்கப்பூர் முக்கிய ஒப்பந்தம்
சிங்கப்பூர்:
குஜராத்தில் நடக்கும் மோசமான வன்முறைகள் காரணமாக பல அந்நிய முதலீடுகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதுஎன்று பிரதமர் வாஜ்பாய் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
குஜராத்தில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களிடையேவருத்தத்துடன் பேசிய வாஜ்பாய், இதனால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படாது என்றுநம்பிக்கையும் தெரிவித்தார்.
இந்தியா போன்ற பெரும் குடியரசு நாட்டில் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது மிகவும்துரதிருஷ்டவசமானது என்று வாஜ்பாய் கூறினார்.
இதனால் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வருத்தமடைந்தாலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கானவாய்ப்புக்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதற்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது என்று வாஜ்பாய்தெரிவித்தார்.
முன்னதாக, தொலைத் தொடர்புத் துறை சம்பந்தமாக முக்கியமான ஒப்பந்தத்தில் இந்தியாவும் சிங்கப்பூரும் இன்றுகையெழுத்திட்டுள்ளன.
தொலைத் தொடர்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக இருநாடுகளும் வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது சந்தித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தம்கையெழுத்தானது.
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் ஆகியோர் முன்னிலையில் இந்தஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னதாக இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பல்வேறு விதமான உறவுகள் குறித்து இரு பிரதமர்களும்விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications