மதுக் கடைகளில் "பார்"களுக்குத் தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மதுக் கடைகளில் பார்கள் வைக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் சூர்யபிரகாசம் இந்த ரிட் மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.அவர் தனது மனுவில்,

கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு அருகே மதுக் கடைகள் வைப்பதற்கும், பார்கள்வைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும் பார்கள் வைப்பதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் குறித்தும் அரசுக்கு யோசனைதெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளேன்.

எனது யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு அமலாக்கப்படும் வரை பார்கள் வைப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாதுஎன்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்தான் அதிகம். ஒருவேளை உணவு கூட கிடைக்காமல்பலரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மதுக் கடைகளை இழுத்து மூடுவதை விட்டுவிட்டுபார்கள் திறக்க அரசு முடிவெடுத்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக் கடைகளை முதலில் அகற்ற வேண்டும்.அதன் பிறகே பார்கள் வைப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுகூறியுள்ளார் சூர்யபிரகாசம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+