சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டா? - இல. கணேசன் விளக்கம்
சென்னை:
வரும் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாங்கள் போட்டியிடுவோம்என்பதெல்லாம் வெறும் யூகங்களே என்று தமிழக பாஜக பொதுச் செயலாளரான இல. கணேசன் இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரப்பாக்கம் ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளின் எம்.எல்.ஏக்களும்மரணமடைந்ததால் அவை காலியாக உள்ளன. இவற்றிற்கு மே மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என்றுதெரிகிறது.
இந்நிலையில் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவாதிக்க பாஜகவின் மாநிலசெயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து இல. கணேசன்கூறுகையில்,
தமிழகத்தில் பாஜக இப்போது சுதந்திரமான கட்சியாக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை. திமுக, அதிமுகஆகிய கட்சிகளோடு எங்களுக்கு நட்பு உள்ளது.
சட்டசபை இடைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து நெல்லையில் கூடிமுடிவெடுக்கவுள்ளோம். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கவுள்ளார்.
இடைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோமா அல்லது அதிமுகவுடன் இணைந்துபோட்டியிடுவோமா என்பது குறித்தெல்லாம் இப்போது கூற முடியாது.
அதிமுகவுடன் நாங்கள் சேர்ந்து போட்டியிடுவோம் என்பதெல்லாம் வெறும் யூகங்களே என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications