சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் 16வது மற்றும் 99வது வார்டுகளில் நேற்று நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்த இரு வார்டுகளுக்கும் நேற்று நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை)எண்ணப்பட்டன.

இதில் 16வது வார்டில் அதிமுக வேட்பாளர் புருஷோத்தமன் வெற்றி பெற்றார். 99-வது வார்டில் அதிமுக சார்பில்போட்டியிட்ட சுகுமார் வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த இடைத் தேர்தலின்போது 99வது வார்டில் திமுகவைச் சேர்ந்த ஆனந்தன்என்பவர் வெற்றி பெற்றார். அவர் சமீபத்தில் இறந்த பின்னரே இங்கு நேற்று இடைத் தேர்தல் நடந்தது.

இந்த வார்டை தற்போது அதிமுக கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

99வது வார்டில் அதிமுகவினர் அதிக அளவு கள்ள ஓட்டுக்கள் போட்டு முறைகேடு செய்ததாக திமுக புகார்கூறியுள்ளதும் இதன் காரணமாக இன்று சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டதும் நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+