சிங்கப்பூரில் வாஜ்பாயின் விமானத்தில் கோளாறு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இருந்து கம்போடியா செல்ல பிரதமர் வாஜ்பாய் பயன்படுத்திய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயணம் தாமதமடைந்தது.

கம்போடிய விமான நிலையங்களில் ஜம்போ ரக விமானங்களை தரையிறக்க முடியாது என்பதால் இந்தியன்ஏர்லைன்சின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானத்தை வாஜ்பாய் பயன்படுத்தினார்.

இதற்காக இந்த விமானம் டெல்லியில் இருந்து சிங்கப்பூர் சாங்காய் விமான நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இன்று தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு வாஜ்பாய் கம்போடியா புறப்பட விமானத்தில் ஏறினார்.

ஆனால், அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் பேக்-அப் மின்சப்ளையில் பிரச்சனை உருவானது. விமானத்தின் உள்ளே விளக்குகள் திடீரென எரியாமல் போயின.

மீண்டும் மீண்டும் பல முறை இந்தப் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து விமானி டி.டி. காந்தி உடனடியாக பொறியாளர்களை அழைத்தார். அவர்கள் வந்து சரி செய்த பின்னர்தான் விமானம் புறப்பட்டது.

விமானக் கோளாறுக்காக பிரதமரிடம் நேரில் வந்து வருத்தம் தெரிவித்த பைலட், தரைக் கட்டுப்பாட்டுபொறியாளர்கள் தான் இந்தக் கோளாறுக்குக் காரணம் என்றார். தரையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தைபொறியாளர்கள் திருப்பியபோது செய்த தவறு தான் இந்த மின் சப்ளை துண்டிப்புக்குக் காரணம் என்றார்.

சுமார் அரை மணி நேர தாமதத்துக்குப் பின் விமானம் கம்போடியா புறப்பட்டது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப்பின் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இந்தியப் பிரதமர் வெளிநாட்டுப் பயணத்துக்கு பயன்படுத்துகிறார்.வழக்கமாக வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏர்-இந்தியாவின் போயிங் 747 ஜம்போ ஜெட்கள் தான்பயன்படுத்தப்படும்.

கம்போடிய விமான நிலையங்களை மனதில் கொண்டு தான் இந்தியன் ஏர்லைன்சின் சிறிய விமானம்பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதில் கோளாறு ஏற்பட்டு தனது பெருமையை இந்தியன் ஏர்லைன்ஸ் தக்கவைத்துக் கொண்டுவிட்டது.

கம்போடியாவில் வாஜ்பாய்:

இன்று சிங்கப்பூரில் இருந்து கம்போடியத் தலைநகர் நாம்பெங் போய்ச் சேர்ந்த வாஜ்பாயை, அந் நாட்டுப் பிரதமர்சாம்டெக் ஹன் சென் மற்றும் மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளித்தனர்.

ஏராளமான கம்போடியக் குழந்தைகளும் இந்திய-கம்போடிய தேசியக் கொடிகளை அசைத்து வாஜ்பாயைவரவேற்றனர்.

இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கு வாஜ்பாய் அந்நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

கம்போடிய மன்னர் நாரோத்தம் சிகானூக்கை சந்திக்கவிருக்கும் வாஜ்பாய், அந்நாட்டிலுள்ள புகழ் பெற்றஅங்கோர்வாட், பெயோங் மற்றும் டாபிரம் ஆகிய கோவில்களுக்கும் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+