குஜராத் வன்முறை: வாஜ்பாய் தலையிட திமுக கோரிக்கை
சென்னை:
குஜராத்தில் நடந்து வரும் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை விடுத்தார்.
குஜராத் வன்முறை தொடர்பாக இதுவரை மெளனம் சாதித்து வந்த திமுக தற்போதுதான் தன் வாயைத் திறக்கஆரம்பித்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே குஜராத்வன்முறையை அடக்க முடியாத பாஜக அரசைக் கண்டித்த நிலையில், திமுகவும் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய சிங்கப்பூர்-கம்போடிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடன்,குஜராத் விவகாரத்தில் தெளிவான முடிவை எடுப்பார் என்று கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவை நோக்கி மெள்ள நகர்ந்து கொண்டிருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமானஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கமறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்காக நிதி கேட்டு மத்திய அரசை திமுக மிரட்டுமா என்று நிதி அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கு, திமுக ஆட்சியில் இருந்த போதே மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுப்போராடியிருக்கிறோம் என்று கருணாநிதி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications