அதிமுகவினர் கோஷ்டி மோதல்: பற்கள் உடைந்தன, காது துண்டானது
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் அமைச்சர் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவினர் கடும்மோதலில் ஈடுபட்டனர். காதைக் கடித்தும், பற்களை உடைத்தும் ரத்தக் களறி ஏற்படுத்தினர்.
இதனால் அந்தப் பகுதியில் சென்ற பொது மக்கள் பயந்து போய் உயிருக்கு அஞ்சி சிதறிஓடினர்.
அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விஸ்வநாதன்,முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் (ஜெயலலிதாவைப் பார்த்தால் கண்ணத்தில் போட்டுக்கொள்பவர்) ஆகியோர் வாணியம்பாடிக்கு வந்து அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கினர்.
இந்த மாவட்டத்தின் உள்கட்சிப் பிரச்சனை குறித்து பேச கட்சியினர் அனைவரையும்அழைத்திருந்தனர்.
அதிமுகவின் பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழடாடா சுமோக்கள், அம்பாசிடர்கள், குவாலிஸ்களில் வந்து இறங்கினர்.
பளபளா தங்க பிரேஸ்லெட்டுகள், சைக்கிள் செயின் தடிமனில் கழுத்தில் தங்கச் சங்கிலிகள்சகிதமாக தங்கள் வசதியை வெளிக்காட்டிக் கொண்டு இவர்கள் வந்து இறங்கியதோரணையே அனைவரையும் அச்சுறுத்தியது.
ஆம்பூர் நகர அதிமுக முக்கியஸ்தரான அஞ்சானின் ஆட்கள் மாவட்ட பொதுக் குழுஉறுப்பினர் சேகர் மீது புகார்களை வீச, பதிலுக்கு சேகரின் ஆட்கள் நீ என்ன ஒழுங்கா என்றுகேட்டவண்ணம் அஞ்சான் மீது புகார் பட்டியல் வாசித்தனர்.
ஒரு கட்டத்தில் வாடா போடா என்று மோதிக் கொண்ட இரு தரப்பினரும் திடீரெனகைகலப்பில் இறங்கினர்.
சேகருக்கு முகத்தில் கும் குத்து விழுந்தது. இதில் சேகரின் பற்கள் இரண்டு தரையில்விழுந்தன. முகமெல்லாம் ரத்தக் களறியாக அமைச்சரிடம் போய் நின்று அழுதார் சேகர்.
இதையடுத்து சேகரின் ஆட்கள் அஞ்சானின் ஆட்கள் மீது பாய்ந்தனர். அஞ்சானின்ஆதரவாளரான சீனிவாசன் என்பவரின் காதை சேகரின் ஆதரவாளர் ஒருவர் கடித்துத்துப்பினார். ஒரு காதில் ஒரு பகுதியை இழந்த சீனி கத்த மோதல் மேலும் தீவிரமானது.
அடிதடிக் கும்பலைக் கலைக்க அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் முயன்றும் கட்டுப்படுத்தமுடியவில்லை.
உடனே பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் புகுந்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து அமைச்சர் விஸ்வநாதன் கோபத்துடன் அங்கிருந்துவெளியேறினார். தவறு செய்த அனைவர் குறித்தும் கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதாவிடம் விளக்குவேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் விருந்தினர் மாளிகைக்கு வெளியிலும் பெரும பரபரப்பை ஏற்படுத்தியது.அடிதடியைப் பார்த்த மக்கள் பெரும் கலவரம் வெடிக்கப் போவதாக அஞ்சி அந்தப்பகுதியைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினர்.












Click it and Unblock the Notifications