அதிமுக உதவியை நாடும் பா.ஜ.க.
டெல்லி:
தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறினால் அதிமுக, பகுஜன் சமாஜ் போன்றகட்சிகளின் ஆதரவைப் பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க வாய்ப்பு தந்துவிட்டு மத்தியில் அக் கட்சியின்ஆதரவைப் பெற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. உ.பியில் பகுஜன் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு தரும்.
இந்த யோசனைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷிராமும் ஒப்புக் கொண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா மீது பா.ஜ.க. சமீப காலமாக அன்பு மழை பொழிந்து வருகிறது. இதனால்தெலுஙகு தேசம் வெளியேறிவிட்டால், அதிமுகவின் ஆதரவைப் பெறவும் பேச்சுவார்த்தைகள்தொடங்கப்பட்டுவிட்டன.
பிரமோத் மகாஜன் இது தொடர்பாக ஜெயலலிதாவிடம் பேச்சு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணியில் திமுக இருப்பதால் அதிமுக நேரடியாக தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேர முடியாது. ஆனால்,அதே நேரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதிமுக எம்.பிக்கள்பா.ஜ.கவுக்கு ஆதரவாக வாக்களித்து காப்பாற்ற முடியும்.
ஆனால், இந்த விவகாரத்தில் திமுகவையும் பகைத்துக் கொள்ளாமல் செயல்பட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதிமுகஆதரவைப் பெற வேண்டிய நிலை வந்தால் அது தொடர்பாக கருணாநிதியுடன் பிரதமர், அத்வானி ஆகியோர்பேச்சு நடத்துவர்.
பிரதமர் சவால்:
இதை அடிப்படையாக வைத்துத் தான் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் பெரும்பான்மையை நிரூபிக்கத்தயார் என்று வாஜ்பாய் இன்று அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
மத்தியில் அரசுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications