மதுரை சித்திரை திருவிழா நாளை தொடக்கம்
மதுரை:
வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (15ம் தேதி, திங்கள்கிழமை)மதுரையில் தொடங்குகிறது.
அருள்மிகு மீனாட்சி அம்மனின் திக் விஜயம், அதைத் தொடர்ந்து இறைவனையே கணவனாக அடைந்தது,பட்டாபிஷேகம் ஆகியவற்றின் தொகுப்பாகவே சித்திரைத் திருவிழா அமைந்துள்ளது. அத்தோடு, மீனாட்சிஅம்மனின் திருமணத்தைக் காண ஓடோடி வந்த அழகர், அவர் வருவதற்கு முன்பே திருமணம் நடந்து விடுவதால்கோபித்துக் கொண்டு வைகை ஆற்றில் இறங்குவது ஆகியவற்றையும் உள்ளடக்கியதே சித்திரைத் திருவிழா.
திருமலை நாயக்கருக்கு முன்பு வரை இந்த சித்திரைத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.திருமலை நாயக்கர்தான், மீனாட்சி-சுந்தரேஸ்வர் திருமண நிகழ்ச்சியையும், அழகர் ஆற்றில் இறங்குவதையும்ஒன்றிணைத்து, சைவத்தையும், வைணவத்தையும் கைகோர்க்கச் செய்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் 15ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. அதன் பின்னர்22ம் தேதி மதுரையின் அரசியாக மீனாட்சி முடிசூடிக் கொள்ளும் பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகுஒவ்வொரு நாடாக வெற்றி கொண்ட திக் விஜயம் 23ம் தேதி நடக்கிறது.
24ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குவரும் அனைத்துப் பெண்களுக்கும் மாங்கல்யக் கயிறு புதிதாக வழங்கப்படும். மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த திருமணமான பெண்கள் அனைவரும் தங்களது மாங்கல்யக் கயிற்றை மாற்றிக் கொள்வர்.
திருக்கல்யாணத்திற்குப் பிறகு 25ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். மதுரை நகரின் முக்கிய வீதிகளில் இந்ததேரோட்டம் நடக்கும்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் பெருமான், கள்ளழகர் கோலத்தில் வைகை ஆற்றில்இறங்கும் நிகழ்ச்சி 27ம் தேதி நடக்கிறது.
அதற்கு முன்பு மதுரை வரும் அழகரை மதுரை மாநகர மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி 26ம் தேதி மாலைநடக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications