தலால் ஆஸ்மியை ஒப்படைக்கக் கோருகிறது குவைத்
சென்னை:
சென்னைக்கு போலி பாஸ்போர்ட் மூலம் காதலர் காதர் பாஷாவுடன் தப்பி வந்த குவைத் பெண் தலால் ஆஸ்மியைதனது நாட்டிடம் ஒப்படைக்கக் கோரி குவைத் நாட்டுத் தூதரகம், இந்திய வெளியுறவுத் துறைக்குஅதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
குவைத்தைச் சேர்ந்தவர் தலால் ஆஸ்மி. இவருக்கும், ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவரான காதர்பாஷாவுக்கும், காதல் ஏற்பட்டது. ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவரான காதர் பாஷாவால் தலால் ஆஸ்மியைத்திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை. இதனால் போலி பாஸ்போர்ட் மூலம் காதர் பாஷாவுடன் சென்னைக்குவந்தார் தலால் ஆஸ்மி.
சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் பிடிபட்ட தலால் ஆஸ்மி, தன்னை குவைத்திற்கு திருப்பிஅனுப்பினால் கல்லால் அடித்துக் கொன்று விடுவர், எனவே திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கைவிடுத்தார். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சில நாள் காவலுக்குப் பிறகு அவர் ஜாமீனில்விடப்பட்டார். பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அவருக்கு பரிசுகள் வழங்கிய ஜெயலலிதா,திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறினார். அதன் பிறகு காதலர் காதர் பாஷாவுடன் கடப்பாசென்ற அவர் அங்கு அவரை திருமணம் செய்து கொண்டு குடிசை வீட்டில் வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள குவைத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சென்னை வந்து தலால்ஆஸ்மியை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தமிழக காவல்துறையினர் தனக்கு ஒத்துழைப்பு தரவில்லைஎன்று அவர் புகார் கூறினார். தலால் ஆஸ்மி மன நிலை சரியில்லாதவர் என்றும், அவர் குவைத் திரும்பினால்கல்லால் அடித்துக் கொல்லப்பட மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் செத்தாலும் இந்தியாவில்தான்சாவேன், காதலனைப் பிரிந்து குவைத் செல்ல மாட்டேன் என்று தலால் ஆஸ்மி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து தலால் ஆஸ்மியை குவைத்திடம் திரும்ப கொடுக்குமாறு கோர மாட்டோம் குவைத் தூதரகம்அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில் புதிய திருப்பமாக, தலால் ஆஸ்மி மன நிலை சரியில்லாதவர், எனவே அவரதுஉடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை குவைத்திடம் ஒப்படைக்க வே ண்டும் என்று குவைத் அரசு, இந்தியவெளியுறவுத் துறைக்கு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
குவைத்தின் புதிய கோரிக்கை தொடர்பாக இந்திய அரசு இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications