துப்பாக்கிகள் தயாரித்த கொள்ளைக் கும்பல் கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ரிவால்வர், நாட்டு துப்பாக்கிகளைத் தயாரித்த 3 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் துப்பாக்கிகளைக் காட்டி பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து வந்தது.இதையடுத்து இக் கும்பலைப் பிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சமீபத்தில் இரும்புக் கடையில் அதன் அதிபரை பட்டப் பகலில் ஒரு கும்பல் துப்பாக்கியைக் காட்டிமிரட்டியது. பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து அவர் தப்பினார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் பழைய இரும்புக் கடையை வைத்து நடத்தி வந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.அந்த இரும்புக் கடையில் மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து இந்த நபர் நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்துவந்துள்ளார்.
இவர்கள் ரிவால்வர் ரக துப்பாக்கிகளையும் தயாரித்து வந்துள்ளனர். இந்த துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டிபல்வேறு இடங்களில் கொள்ளையடித்தும் வந்துள்ளனர்.
இப்போது இக் கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications