நாளை ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு நாளை (திங்கள்கிழமை) முதல் முறையாக ஆண்டிப்பட்டிக்குச்செல்கிறார் அத்தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஜெயலலிதா.
நாளை காலை 9 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரைக்குச் செல்லும் ஜெயலலிதா, காலை 10 மணிக்குஅங்கிருந்து அரசுக்குச் சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் மூலம் கிளம்பி ஆண்டிப்பட்டிக்குச் சென்று இறங்குகிறார்.
தன்னை வெற்றி பெறச் செய்த ஆண்டிப்பட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அங்கு ரூ.98 கோடிசெலவிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தெப்பம்பட்டி கண்மாய் அமைக்கும் பணிக்கு ஜெயலலிதா அடிக்கல்நாட்டுகிறார்.
பின்னர் தேனி சாலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தற்காலிக மகளில் போலீஸ்நிலையத்தையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
அதன் பிறகு ஆண்டிப்பட்டியில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தையும் திறந்து வைக்கும் ஜெயலலிதா,பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்.
இவை தவிர பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் துவக்கி வைக்கிறார்.
இதற்கான அனைத்துப் பணிகளும் பெரியகுளம் எம்.பியான தினகரன் தலைமையில் முழு வீச்சில் நடந்துவருகின்றன. ஜெயலலிதா வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது வேட்பாளராக ஜெயலலிதாவை வரவேற்றஆண்டிப்பட்டி மக்கள், தற்போது அவரை தமிழக முதல்வராக வரவேற்பு கொடுக்கவும் தயாராகி விட்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தின்முதல்வராக கடந்த மார்ச் 2ம் தேதி பதவியேற்றார் என்பது நினைவிருக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications