ரயிலில் மாணவி கொலை .. உறவினர் கைது
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே முகையூர் என்ற இடத்தில் ஓடும் ரயிலில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாகஅந்தப் பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள தணிகாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவிசங்கீதா, கடந்த மாதம் 22ம் தேதி விழுப்புரம் வந்த காட்பாடி பாசஞ்சர் ரயிலில் கழிப்பறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொன்றது யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. துப்புக் கிடைக்காமல்போலீஸார் திணறி வந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் சரக டிஐஜி சிதம்பர சாமி கூறுகையில்,தணிகாலம்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியான். இவர், சங்கீதாவுக்கு அண்ணன் முறையில் வருகிறார்.முகையூர் ரயில் நிலையத்தில் இவர் டிக்கெட் ஏஜென்டாக இருந்து வருகிறார்.
தினசரி பள்ளி செல்ல ரயிலில் வரும் சங்கீதா முகையூர் ரயில் நிலையத்தில் இறங்கி வீடு செல்வார். அப்போது பலமுறை சங்கீதாவை தனது சைக்கிளில் கன்னியான் கூட்டிச் செல்வது வழக்கமாம். இதனால் அவர்களுக்குள்நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கம் நாளாக, நாளாக கன்னியானுக்குள் ஒருவித நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உறவைமுறிக்க, சஙகீதாவைக் கொன்று விட முடிவு செய்துள்ளார். 22ம் தேதி வழக்கமாக சஙகீதா ஏறும் ரயிலில், சங்கீதாஇருந்த பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தனது தந்தையுடன் ஏறியுள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல், அடுத்தசங்கீதா இருந்த பெட்டிக்குப் போயுள்ளார். அங்கு அவரிடம் பேசிய அவர் கழிப்பறைக்குச் சென்று அவருடன்உறவு கொண்டுள்ளார். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு தந்தை இருந்த பெட்டிக்குவந்து விட்டார்.
போலீஸார் இந்தக் கொலை தொடர்பாக பலரையும் கண்காணித்து வந்தனர். அவர்களில் கன்னியானும் ஒருவர்.போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் உளறிக் கொட்டவே, போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதில் உண்மையைக் கொட்டி விட்டார் கன்னியான் என்றார் டிஐஜி சிதம்பரசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications